வடக்கு மாகாண விளையாட்டு விழாவில் யாழ்ப்பாணம் மாவட்டம் முதலிடம்!

2022 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண விளையாட்டு விழாவில் யாழ்ப்பாணம் மாவட்டம் முதலிடத்தையும், முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன.

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடக்கின் ஐந்து மாவட்டங்களுக்கும் இடையே மாகாணமட்ட விளையாட்டுப்போட்டி துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

86 தங்கம், 59 வெள்ளி, 38 வெண்கலம் உள்ளடங்கலாக 183 பதக்கங்களைப் பெற்று யாழ்ப்பாண மாவட்டம் முதலாம் இடத்தையும், முல்லைத்தீவு மாவட்டம் 42 தங்கம், 39 வெள்ளி, 42 வெண்கலப் பதக்கங்களுமாக மொத்தமாக 123 பதக்கங்களைப் பெற்று இரண்டாம் இடத்தையும், மன்னார் மாவட்டம் 19 தங்கம், 16 வெள்ளி, 20 வெண்கலப் பதக்கங்களுடன் 55 பதக்கங்களைப் பெற்று மூன்றாம் இடத்தையும், வவுனியா மாவட்டம் 19 தங்கம், 12 வெள்ளி, 17 வெண்கலம் என 48 பதக்கங்களுடன் நான்காம் இடத்தையும், கிளிநொச்சி மாவட்டம் 14 தங்கம், 22 வெள்ளி, 30 வெண்கலம் என்று 66 பதக்கங்களைப் பெற்று 5ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.