கள்ளக்காதல் கொடூரம்… புருஷனை கொல்ல வீட்டுக்கு தீ வைத்த மனைவி.. 6 பேர் பலியான சோகம்..
தெலங்கானா மாநிலம் மஞ்ரியலா மாவட்டம் ராமகிருஷ்ணபுரம் கிராமத்தில் சிவையா, பத்மா தம்பதியினர் வசித்து வந்தனர் . இந்நிலையில், சம்பவ தினமான டிசம்பர் 17ஆம் தேதி சிவையா வீட்டிற்கு சிங்கரேனி நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்யும் சந்தையாவும் வந்திருந்தார். மேலும், அந்த வீட்டில் பத்மாவின் அக்கா மௌனிகா அவருடைய இரண்டு குழந்தைகளான ஹீம பிந்து, ஸ்வீட்டி ஆகியோரும் இருந்துள்ளனர்.
அன்றைய தினம் இரவு சாப்பிட்ட பின் வீட்டில் ஆறு பேரும் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் அந்த வீடு திடீரென்று தீப்பற்றி எறியத் தொடங்கியது.இதனை கவனித்த அருகில் வசிப்பவர்கள் தீயை அணைத்து அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் வீடு முழுவதுமாக எரிந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஆறு பேரும் உடல்கள் கருகி மரணம் அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த மஞ்சிரியாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வந்தனர். ஆறு பேரும் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும்போது கதவை தாழிட்டு வீட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்திருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்த தீ விபத்து பற்றி மஞ்சரியாலா போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனர். விசாரணையில் சந்தையாவிற்கு அந்த ஊரை சேர்ந்த சிவையா என்பவரின் மனைவி பத்மாவுடன் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது.
மேலும் சந்தையா மனைவி சுஜானாவுக்கு லக்ஷ்மன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. கணவனின் கள்ளத்தொடர்பை சுஜனாவால் சகித்துக் கொள்ள இயலவில்லை. கணவர் சந்தையா தனது வருவாயை எல்லாம் பத்மாவுக்கு கொடுத்து வந்துள்ளது சுஜனாவுக்கு மேலும் ஆத்திரப்படுத்தியுள்ளது. இதனால் மனதில் வன்மம் கொண்ட சுஜனா தனது கள்ளக்காதலன் லக்ஷ்மன் உதவியுடன் கணவன் சந்தையா, பத்மா ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். இரண்டு முறை அவர்கள் மீது காரை மோதி கொலை செய்ய முயற்சிகள் நடைபெற்றுள்ளன.
இந்த நிலையில் சம்பவத்தன்று சிவையா வீட்டிற்கு சுஜனாவின் கள்ள காதலர் லக்ஷ்மன் தன்னுடைய நண்பர்களான ரமேஷ், அஞ்சையா ஆகியோருடன் வந்து இரவு அவர்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது கதவை தாளிட்டு வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பெட்ரோல் வாங்க பயன்படுத்தப்பட்ட கேன்கள், பெட்ரோல் வாங்கிய போது பதிவான சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி சுஜனா, லக்ஷ்மன், ரமேஷ்,அஞ்சையா மற்றும் அவர்களுக்கு இன்ஃபார்மர் ஆக செயல்பட்ட சாமையா ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து விசாரணைக்கு பின் சிறையில் அடைத்துள்ளனர்.