உங்கள்ட்ட பேச கூட எனக்கு விருப்பம் இல்ல.! அடிப்படை புரிதலே இல்ல.!
பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி சுமார் 70 நாட்களை கடந்து விட்டது. இந்த சீசன் எப்போதும் போல் இல்லாத அளவிற்கு நாளுக்கு நாள் விறுவிறுப்பை கூட்டி வருகிறது.
21 நபர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டியில் 11 நபர்கள் வெளியேறி விட 10 போட்டியாளர்களுடன் நடைபெற்று வருகிறது. முன் எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்த சீசனை 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருவதால், மக்கள் நேரலையாக ஹவுஸ் மேட்ஸ் செய்யும் விஷயங்களை பார்த்து தெரிந்து கொள்ள முடிகிறது.
இதனால் யார் தவறு செய்தார்கள்? யார் சரியாக பேசுகிறார்கள் என்பதை முன்கூட்டியே மக்கள் கணிக்க தொடங்கி இருக்கின்றனர். இந்த சீசன் ஆரம்பித்த நாள் முதலே சண்டை சச்சரவு என்று மிகவும் பரபரப்பாக இருந்து வருகிறது. பொதுமக்களில் இருந்து ஷிவின் மற்றும் தனலட்சுமி என்ற இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர்.
பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரம் எலிமினேஷன் இருக்காது. இரண்டாவது வாரத்தில் இருந்து எலிமினேஷன் செய்ய தொடங்குவர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜி.பி.முத்து தானாக வெளியேறி விட்டார்.
தொடர்ந்து சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ராம், ஆயிஷா, ஜனனி என மொத்தம் 11போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் யாருமே எதிர்பாராத வண்ணம் ஜனனி எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
மணிகண்டன் குறைவான வாக்குகள் வாங்கிய போதிலும் trp-க்காக ஜனனியை வெளியே அனுப்பிவிட்டனர் என்று ஜனனி ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ரேங்கிங் டாஸ்க் பற்றி கமலஹாசன் பேசுகிறார். அப்போது இந்த டாஸ்க் குறித்து புரிதலே இல்லாமல் கர்சீப் போட்டு பேருந்தில் சீட் பிடிப்பது போல சிலர் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அது திறமை சம்பந்தப்பட்டது என்பதை புரிந்து கொள்ளாமலே இந்த ஹவுஸ் மேக்ஸ் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இடிப்பார் இல்லாத மன்னன் போல எதிர்பாராத முரடர்களும் இந்த வீட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று அசீமை மறைமுகமாக தாக்கினார். தன்மானம் சுயமரியாதை உள்ளவர்கள் அடுத்தவர்களை அவமரியாதை செய்யும்பொழுது ஒரு கணம் யோசிப்பார்கள். ஆனால் இவர் அவ்வாறு செய்வதாக தெரியவில்லை என்று அசீமை நேரடியாக தாக்கினார் கமல். இன்றைய எபிசோடில் அசிம் கமலால் வறுத்து எடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.