குட்டித் தேர்தல் எப்போது? – ஜனவரி 5 இற்கு முன் அறிவிப்பு என்கிறது ஆணைக்குழு.
எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த மாத இறுதியில் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
ஆயினும், சிற்சில காரணங்களால் தேர்தல் குறித்த அறிவிப்பை சில நாள்களுக்கு ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.