கொரோனாவின் கோரத் தாண்டவத்திற்கு மத்தியில் சீனா.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.
அங்கு தினமும், 10 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே கடந்த 1 ஆம் திகதி முதல் 20 நாட்களில் சீனாவில் 25 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
ஆனால் சீனா கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பற்றிய தகவல்களை சரியாக அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை குறைத்து சீன அரசாங்கம் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
சீனாவில் தினசரி கொரோனா பாதிப்புகளை அந்நாட்டின் தேசிய சுகாதார மையம் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று முதல் தாங்கள் கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை வெளியிட மாட்டோம் என்று சீனா தெரிவித்துள்ளது.
இனி கொரோனா பாதிப்பு தகவல்கள் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தால் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த மாற்றத்திற்கான காரணங்களை குறிப்பிடவில்லை. அதேபோல் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எப்படி கொரோனா தகவல்களை அளிக்கும் என்பது குறித்தும் கூறப்படவில்லை.