இலங்கை திரையரங்குகளில் மதிசுதாவின் ‘வெந்து தணிந்தது காடு’
இலங்கை இயக்குனர்கள் வரிசையில் தமிழ் குறும்படங்கள் மற்றும் முழு நீள திரைப்படங்கள் மூலம் அறியபட்ட மதிசுதாவின் இயக்கத்தில் உருவாகி , சர்வதேச விருதுகளை பெற்ற
வெந்து தணிந்தது காடு திரைப்படம் இலங்கையில் உள்ள தியைரங்குகளில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் திரையிடப்பட உள்ளது.
திரையிடல் குறித்து இயக்குனர் மதிசுதா வெளியிட்டுள்ள அறிவிப்பு கீழே உள்ளது,
உத்தியோகபூர்வ அறிவிப்பு
”எங்கட வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் வெளியீட்டு நாளும் நேரமும் இணைக்கப்பட்டுள்ளது.
இன்னும் 40 நாட்களே இருக்கின்றன.திரையரங்க வாடகைகள் மிகப் பெரும் தொகையாக இருப்பதால் குறிப்பிட்ட நாளில் மட்டுமே திரையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
உங்கள் நண்பர்களுக்கும் இதைத் தெரிவித்து காட்சிகளின் எண்ணிக்கையை கணிப்பிட இலகுவாக முற்கூட்டியே நுழைவுச் சீட்டுக்களை பெற்று ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
விளம்பரப் பணியில் கை கொடுத்து உதவ நினைக்கும் சகோதரர்களை இரு கரம் கூப்பி அழைக்கின்றேன்.
நன்றிச் செதுக்கலுடன்
சகோதரன்
மதிசுதா