பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தினால் மாநிலமே திவால் ஆகிவிடும் – துணை முதல்வர்
நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரிடமிருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு வந்த வண்ணம் இருப்பது அனைவரும் அறிந்ததே. அதேசமயம் பலர் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில் பழைய பென்ஷன் திட்டத்தை நாம் மீண்டும் அமல்படுத்தும் பட்சத்தில் மாநிலமே திவாலாகும் நிலைக்கு தள்ளப்படும். பழைய பென்ஷன் திட்டமானது 2005 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டு விட்டது. அப்போதைய தேசிய காங்கிரஸ் கட்சியானது இந்த திட்டத்தை வரவேற்றுக் கொண்டாடியது.
பழைய பென்ஷன் திட்டத்தை பொறுத்தவரையில் பணியாளர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு அவர்கள் கடைசியாக வாங்கிய ஊதியத்தில் 50% தொகையானது பென்ஷன் தொகையாக வழங்கப்படும். ஆனால் 2004 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய தேசிய பென்ஷன் திட்டத்தில் இந்த வசதிகளில் மாற்றம் செய்யப்பட்டன. பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசாங்க ஊழியர்கள் மட்டுமே இணையும் வகையில் வசதி செய்யபட்டிருந்தது. அனால் புதிய ஓய்வூதிய திட்டத்தில் தனியார் துறை பணியாளர்களும் இணைய முடியும். ஜனவரி 1, 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த ஆயுத படை வீரகளை தவிர மற்ற அனைவருக்கும் இந்த புதிய ஓய்வூதிய திட்டமானது பொறுந்தும்.
மேலும் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியாளர்கள் தங்களது மாதாந்திர ஊதியத்தில் 10 சதவீதத்தை பங்களிக்கிறார்கள். இதன் காரணமாகவே பலரும் மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பட்னாவிஸ் பேசியதன் படி பார்க்கையில் அரசாங்கம் பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வரப் போவதில்லை என திட்டவட்டமாக இருப்பது தெரிகிறது. ஒருவேளை அவ்வாறு கொண்டு வரும் பட்சத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி செலவாகும் எனவும் இதனால் நாடு திவாலாக வேண்டும் எனவும் அவர் பேசி இருப்பது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா மாநிலத்தின் நிதி அமைச்சராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் எப்படியாவது பழைய பென்ஷன் திட்டமானது மீண்டும் அமல்படுத்தப்படும் என நம்பிக்கையிலிருந்து முன்னால் ஊழியர்கள் பலரும் துவண்டு போய் உள்ளனர்.