முன்னாள் போப் பதினாறாம் பெனடிக்ட் காலமானார்
முன்னாள் போப் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக பதவி விலகி கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, 95 வயதில் அவரது வத்திக்கன் இல்லத்தில் காலமானார்.
அவர் தனது இறுதி ஆண்டுகளை வத்திக்கானின் எக்லேசியா மடாலயத்தில் கழித்தார்.
அவருக்குப் பின் வந்த போப் பிரான்சிஸ், அவரை அடிக்கடி அங்கு சென்று பார்த்ததாகக் கூறினார்.
இது குறித்து வத்திக்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“போப் எமரிட்டஸ் 16ம் பெனடிக்ட் இன்று காலை 9.34 மணிக்கு வத்திக்கானில் உள்ள மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
“கூடுதலான தகவல்கள் கூடிய விரைவில் வழங்கப்படும்.”
போப் எமரிட்டஸின் உடல், “விசுவாசிகளின் வாழ்த்துக்காக” ஜனவரி 2 முதல் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் வைக்கப்படும்
என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.
போப் பெனடிக்ட்டின் இறுதி ஊர்வலத்திற்கான திட்டங்கள் அடுத்த சில மணிநேரங்களில் அறிவிக்கப்படும் என வத்திக்கான் மேலும் தெரிவித்துள்ளது.