அம்மாடியோவ்.. இவ்வளவு வருமானமா? தேவஸ்தானத்தையே ஆச்சரியப்பட வைத்த திருப்பதி உண்டியல் காணிக்கை!

2022ல் திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட இரண்டு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கோவில் உண்டியலில் 1449 கோடி ரூபாயை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். ஆனால் நடப்பு நிதி ஆண்டில் ஆயிரம் கோடி ரூபாய் காணிக்கை வருமானம் கிடைக்கும் என்று தேவஸ்தானம் மதிப்பிட்டு இருந்தது. அதைவிட அதிகமாக தற்போது உண்டியில் காணிக்கை கிடைத்துள்ளது.

ஆனால் திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் நடப்பு நிதியாண்டில் இதுவரை 1361 கோடி ரூபாய்க்கு அதிக தொகை ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைத்துள்ளது. மேலும் கடந்த மார்ச் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் வரை ஒவ்வொரு மாதமும் நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை ஏழுமலையானுக்கு உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. தொடர்ந்து பத்து மாதம் 100 கோடி ரூபாய்க்கும் அதிக தொகை ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைத்தது 2022ல் மட்டுமே. எனவே இது தேவஸ்தான வரலாற்றில் மற்றொரு சாதனையாக கருதப்படுகிறது.

நடப்பு நிதி ஆண்டில் இன்னும் ஜனவரி, பிப்ரவரி,மார்ச் ஆகிய மூன்று மாதங்கள் மீதி உள்ளன. எனவே அடுத்த மூன்று மாதங்களில் கிடைக்க இருக்கும் காணிக்கை வருமானத்தையும் சேர்த்து கணக்கிட்டால் தேவஸ்தானத்தின் காணிக்கை வருமானம் நடப்பு நிதியாண்டில் 1700 கோடி ரூபாயாக அதிகரிக்க அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.