மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு முடக்கம்.

பிரதமர் மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூலையில் பிட்காயின் பரிவர்த்தனைக்காக அமெரிக்காவில் ஜோ பைடன், பாரக் ஒபாமா, பில்கேட்ஸ், எலன் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் ஒரே சமயத்தில் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. பிட்காயின் எனப்படும் கணினி வழி பண பரிவர்த்தனை கும்பலின் கைவரிசை எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் மோடியின்narendramodi _in என்ற டுவிட்டர் கணக்கை ஹேக்கர்கள் திடீரென முடக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது

பிட்காயின் எனப்படும் ‘டிஜிட்டல் கரன்சி’ அல்லது, ‘கிரிப்டோ கரன்சி’ எனும், கணினி வழி பணப் பரிவர்த்தனை செய்யும் கும்பல் மோடியின் டுவிட்டர் கணக்கை முடக்கியதன் பின்னணியில் இருந்துள்ளது தெரியவந்தது.

மேலும் பிரதமரின் தேசிய நிவாரண நிதி திட்டத்திற்கு பிட்காயின் மூலம் பணம் செலுத்தும் படியும் அந்த கும்பல் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. டுவிட்டர் நி்ர்வாகம் இதனை உறுதி செய்து்ளளது. மோடியின் டுவிட்டர் கணக்கை பாதுகாப்பானதாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் டுவிட்டர் தெரிவித்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.