வேண்டுதல் நிறைவேறாத விரக்தியில் கோயிலில் சிலைகளை உடைத்த இளைஞர் கைது..!
வேண்டுதல் நிறைவேறாத விரக்தியில் கோயிலில் சிலைகளை உடைத்த 24 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சந்தன் நகர் மற்றும் சத்தாரிப்பூரா என்ற பகுதியில் உள்ள இரு சிவன் கோயில்களில் சில நாள்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. இது அப்பகுதியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த சில அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தன.
அதன் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்ததில் ஒரே இளைஞர் தான் அந்த இரு கோயில்களிலும் சிலைகளை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில் சுபம் கைத்வாஸ் என்ற 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையின் போது அவர் கொடுத்த வாக்குமூலம் தான் காவல்துறையினரையே திகைக்க வைத்துள்ளது. ஒரு கண்ணில் பார்வை குறைபாடு கொண்ட சுபம் தனது குறைபாடு நீங்க வேண்டும் என அந்த கோயில்களில் தொடர்ச்சியாக வழிபாடு செய்துள்ளார்.