இழுபறியில் ஆளுநர்கள் நியமனம் ரணில் மீது அதிருப்தியில் ‘மொட்டு’.
ஒன்பது மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமனம் மேலும் தாமதமாகின்றன. இதனால் மொட்டுக் கட்சியினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றார்கள் என்று அறியமுடிகின்றது.
மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமன விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் (மொட்டுக் கட்சி) இடையில் சில மாதங்களுக்கு முன் ஓர் இணக்கப்பாடு எட்டப்பட்டது.
மொட்டுக் கட்சி சார்பில் ஐந்து ஆளுநர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் நான்கு ஆளுநர்களும் நியமித்தல் என்பதே அந்த இணக்கப்பாடு.
ஆனால், ஜனாதிபதி எதுவித காரணமும் இன்றி அந்த நியமனங்களை இழுத்தடிக்கின்றார் என்று மொட்டுக் கட்சி எம்.பிக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஏற்கனவே, அமைச்சரவை நியமனம் கூட அப்படியே கிடக்கின்றது. இதனால் மொட்டுக் கட்சி எம்.பிக்கள் ஜனாதிபதி ரணில் மீது கடும் அதிருப்தியில் உள்ளார்கள் என்று அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.