உள்ளூராட்சி சபைத் தேர்தல் நான்கு மாதங்களுக்கு ஒத்திவைப்பு?
எதிர்வரும் மார்ச் முதல் வாரத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்திருந்த நிலையில், பல காரணங்களை முன்வைத்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை நான்கு மாதங்களுக்கு அதாவது, ஜூலை மாதம் வரை ஒத்திவைப்பதற்கு அரசு ஆலோசித்து வருகின்றது என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலுக்கு நிதியை வழங்குவதில் இருக்கின்ற சிக்கல், மாவட்ட செயலார்கள் 7 பேர் ஓய்வு – இடமாற்றம் பெற்றமை மற்றும் நெல் கொள்வனவுக்காகப் பணம் ஒதுக்குதல் உள்ளிட்ட பல காரணங்களை அடிப்படையாக வைத்தே தேர்தலை ஒத்திப்போடுவதற்கு அரசு ஆலோசித்து வருகின்றது என்று அரச உயர்மட்டம் தெரிவிக்கின்றது.
இதே சந்தேகத்தை எதிர்க்கட்சிகளும் தெரிவிக்கின்றன. ஆனால், காரணம் மேற்கூறப்பட்டவை அல்ல.
தோல்விப் பயம் காரணமாகவே தேர்தலை ஒத்திப்போடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று அவை கூறுகின்றன.