சஜித் அணியின் 12 எம்.பிக்களில் முதலில் மூவர் தாவல்!
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து 12 பேர் அரசில் இணையப் போகின்றார்கள் என்ற தகவல் கடந்த மாதம் வெளிவந்திருந்த நிலையில், அந்த 12 பேரில் மூவர் தான் முதலில் அரசுடன் இணையப் போகின்றார்கள் என்ற தகவல் இந்த மாதம் வெளியாகியுள்ளது.
அவர்கள் களுத்துறை, கண்டி, கேகாலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூவரில் இருவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளும், ஒருவருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியும் வழங்கப்படவுள்ளன என்று மேலும் தெரிவிக்கின்றது அந்தத் தகவல்.