சீரடி சென்ற பேருந்து விபத்து: 10 பேர் பலி; மேலும் பலர் காயம்
சீரடி சென்ற பேருந்து ஒன்று லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் – சீரடி நெடுஞ்சாலையில் பதாரே என்ற இடத்தில் சீரடி சென்றுகொண்டிருந்த பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் இருந்த பக்தர்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.