72 பேருடன் சென்ற விமானம் விபத்து; 40க்கும் மேற்பட்டோர் பலி.
நேபாளத்தில் உள்ள பொக்ரா சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
விமானத்தில் 68 பயணிகளும் 4 பணியாளர்களும் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜெட்டி(Yeti) ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமே விபத்தில் சிக்கியுள்ளது.
நேபாளத்தின் பழைய விமான நிலையத்துக்கும் பொக்காரா சர்வதேச விமான நிலையத்துக்கும் இடையிலேயே விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விமானம் காத்மாண்டுவில் இருந்து பொக்காரா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.