டிக்கெட் எடுத்தால் போதும்,விசா தேவையில்லை என்ற அதிரடி அறிவிப்பு.
டிக்கெட் வாங்கும் போது இலவச சுற்றுலா விசா வழங்கும் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று சவுதி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல் ஷஹ்ரானி தெரிவித்தார்.
டிக்கெட் வாங்கும் போது வேறு கட்டணம் ஏதும் செலுத்தாமல் சுற்றுலா விசா வழங்கும் சேவை இன்னும் சில நாட்களில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி ஏர்லைன்ஸின் இதனை “உங்கள் டிக்கெட் தான் உங்கள் விசா என்று” பெயரில் அழைக்கிறது.
இந்த விசாவில் நீங்கள் சவுதியில் 96 மணிநேரம் (நான்கு நாட்கள்) செலவிட அனுமதிக்கும். இந்த நேரத்தில் பயணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லலாம் மற்றும் உம்ரா செய்யலாம்.
சுற்றுலா மற்றும் உம்ரா யாத்திரைக்காக சவுதி அரேபியாவுக்கு வருபவர்களுக்கு இந்த புதிய சேவை பெரும் பயனளிக்கும். சவுதி ஏர்லைன்ஸின் புதிய டிக்கெட் முன்பதிவு முறையில், பயணிகள் டிக்கெட் முன்பதிவுடன் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும்.
டிக்கெட் புக் செய்யும் போது விசா தேவையா என்ற கேள்வியும் இருக்கும். விசா தேவைப்படுபவர்கள் மூன்று நிமிடங்களுக்குள் செயல்முறையை முடிக்க முடியும். சில நாடுகளில் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தின் வழியாக விசாவிற்கு விண்ணப்பிக்கும் முறை உள்ளது.
ஆனால் சவுதி ஏர்லைன்ஸ் அறிமுகம் செய்யும் புதிய வசதி மூலம் இத்தகைய முறை அவசியம் இல்லை என அந்நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். புதிய முறையானது சவுதி அரேபியாவிற்கான சர்வதேச சேவைகளுக்கான தேவையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச விமானங்களுக்கான தேவையை 40 சதவீதம் அதிகரிக்கும் நடப்பு ஆண்டிற்கான திட்டத்திற்கு சவுதி ஏர்லைன்ஸ் தயாராக உள்ளது.
சவுதி ஏர்லைன்ஸ் விரைவில் புதிய இடங்களுக்கு விமான சேவையை தொடங்கவுள்ளது. எந்தெந்த நகரங்களுக்கு என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
உம்ராவைச் செய்ய விரும்புவோரின் நிலையான தேவையே டிக்கெட்டுடன் இணைக்கப்பட்ட இத்தகைய விசா முறையைத் தொடங்க முக்கிய உந்துதலாக இருந்தது என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
“உங்கள் டிக்கெட் தான் உங்கள் விசா” என்ற இந்த புதிய வகையான விசாவைப் பயன்படுத்தி, ஜித்தா விமான நிலையம் மட்டுமின்றி, நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும்
நீங்கள் இறங்கலாம். பயணத்தை முடித்துக் கொண்டு உங்களுக்கு வசதியான விமான நிலையத்திலிருந்தும் தாயகம் திரும்பலாம்.