மு.காவிலிருந்து தாவியோர் மீளவும் வந்து இணையலாம்! – ஹக்கீம் அழைப்பு.
“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் என்ற வகையில் யாரையும் கட்சியிலிருந்து நானாக விரட்டியது கிடையாது.”
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை கட்சியில்இணைத்துக்கொண்டது போன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை இணைத்துக்கொள்வீர்களா என்று ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.ஐ.முஹாஜிரீன் கேட்டதற்கே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை தாய்வீடாகக் கருதும் யாருக்கும் இந்தக் கதவு திறந்திருக்கும். அதில் எந்தச் சந்தேகமும் கிடையாது.
ஆனால், அவர்கள் இணைய விரும்புகின்ற போது இந்தக் கட்சியின் பாரம்பரியத்துக்கமைய, கட்சியில் இருக்கும் அனைத்து முக்கியஸ்தர்களுடனும் கலந்துரையாடியதன் இறுதியில் சாத்தியமான முடிவை எடுக்கலாம்.
எதிர்காலத்தில் கட்சியில் யாரும் இணைய விரும்பினால், அது தொடர்பாக பரிசீலித்து இணைக்கப்படுவார்கள்” – என்றார்.