தேர்தல் கமிஷன் உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல்.
தேர்தல் ஆணைய உறுப்பினர்களுக்கு வெளிநாட்டில் இருந்து தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
காலியில் வசிக்கும் நபர் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி இலக்கத்தில் இருந்து இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நபரும் வெளிநாட்டில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதுவரை மூன்று தேர்தல் ஆணைய உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.