ஸ்மார்ட் கவுன்சில் உருவாக்கப்படும் – சஜித் பிரேமதாச
திருடர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று சிலர் கூறுகின்றனர், ஆனால் தண்டனை முறை என்னவென்று கூறுவதில்லை எனவும், அதற்கான திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
குருநாகல் சத்தியவாதி மைதானத்தில் இன்று (29) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தாக்குதலில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்ட எவரையும் தப்பிச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்றார்.
மேலும், ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட எவருடனும் அரசியல் இல்லை என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், அவர்கள் எந்த சூழ்நிலையிலும் ஆட்சியில் ஈடுபட மாட்டார்கள் என்றும் கூறினார்.
இன்று தெருக்களுக்கு வந்து அவர்களும் ஒன்று , இவர்களும் ஒன்று என சொல்ல முற்பட்ட சில குழுக்கள் வரலாற்றை மறந்து ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் முதன் முதலாக அமைச்சரவை மற்றும் பிரதி அமைச்சர்கள் ஆனதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த நாட்டை வங்குரோத்து செய்த ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு முன்னின்று பலம் கொடுத்தவர்கள் தாங்கள் தான் என்றும் அந்த பாவத்தில் இருந்து தப்ப முடியாது என்றும் எதிர்கட்சி தலைவர் அவர்கள் குறித்து கூறினார்.
வரலாற்றில் முதன்முறையாக ஐக்கிய மக்கள் சக்தியினால் உள்ளூராட்சி பிரதிநிதிகள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவர்களில் எவருக்கும் மோசடி மற்றும் ஊழல்களை செய்வதற்கு இடமளிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.
நன்னடத்தை விதிகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளும் தூங்காத உள்ளூராட்சி சபைகளாக மாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபையின் தலைவர் அல்லது உப தலைவர் சட்ட விரோதமான கொடுக்கல் வாங்கல்களுக்கு இடமளிக்காத வகையில் சகல கிராமங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மேற்பார்வை சபையொன்று நியமிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளை கட்டியெழுப்புவதற்கான பாதுகாவலர் அமைப்பை உருவாக்குவது, உலகில் உள்ளூராட்சி நிறுவனங்களை நிறுவிய நாடுகளுடன் நட்புறவு உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்குவது மற்றும் ஒரு அமைப்பை உருவாக்குவது மட்டுமே தனது ஒரே நோக்கம் என்று அவர் கூறினார். எல்லா நேரங்களிலும் பொது நலனுக்காக அர்ப்பணிப்புடன் இருக்கும் உள்ளூர் அரசாங்க நிறுவனங்கள் அமைக்கப்படும் என்றார் அவர்.