பிரேக் செயல்படாத பஸ்ஸில் பயணித்தவர்களின் உயிர் காத்த சாரதி

நேற்று (30) கொழும்பு நோக்கிச் சென்ற பயணிகள் பஸ் ஒன்று ஹப்புத்தளைக்கும் பேரகலைக்கும் இடையிலான வீதியில் பிரேக் பழுதடைந்தமையினால் பாதாளத்தை நோக்கி இழுத்துச் சென்றதையடுத்து பஸ் சாரதி , பஸ்ஸை வலது புறமாக செலுத்தி , தண்ணி ஓடும் சாலை ஓரத்தில் உள்ள கான்கிரீட் வடிகாலுக்குள் செலுத்தி சமயோசிதமாக  பஸ்ஸை நிறுத்தியதோடு, ஐம்பதுக்கும் மேற்பட்டோரின் உயிரைக் காப்பாற்றியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பதுளை டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணித்த உயிர்களே காப்பாற்றப்பட்டுள்ளன.

இடது புறம் பள்ளமும் , வலது புறம் குன்றும் இருந்ததால் , எதிரே வந்த வாகனங்களை சமாளித்தவாறு கியரை குறைத்து , வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்தியவாறு கான்கிரீட் வடிகாலுக்குள் பஸ்ஸை நிறுத்த முடிந்ததில் சாரதி மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார். பிரேக் வேலை செய்யவில்லை என அறிந்ததும் பயணிகளை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள் என நடத்துனரை அழைத்து சொல்லி அறிவுறுத்தியுள்ளார். முன் சில்லு கான்கிரீட் வடிகாலுக்குள் விழுந்த பின்னும் பஸ் தொடர்ந்து ஓடியதாகவும் , பின் சில்லு விழுந்த பின்னே பஸ்ஸை நிறுத்த முடிந்தது , எனவே எவருக்கும் சேதம் இல்லை என்றார் அவர்.

பேருந்தின் ஹப்புத்தளை, பேரகலை செங்குத்தான சாய்வான வீதியில் பேருந்து சென்றுகொண்டிருந்த போது, ​​திடீரென பிரேக் வேலை செய்யாததால், வலதுபுறம் உள்ள வடிகாலுக்குள் பஸ் சென்றமையால் சாரதியால், பயணிகள் உயிரைக் காப்பாற்ற முடிந்ததாக பஸ்சில் பயணித்தவர்கள் தெரிவித்தனர்.

ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.