கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றில் முதல் நிலையடைந்த மாணவி !
கிளிநொச்சி மாவட்டமானது கிளிநொச்சி கல்வி வலயம் என ஒரு வலயத்தை கொண்டு செயற்பட்டுவந்த நிலையில் கடந்த வருடம் கிளிநொச்சி வடக்கு மற்றும் கிளிநொச்சி தெற்கு என இரண்டு கல்வி வலயங்கலாக பிரிக்கப்பட்டது.
இந்நிலையில் அண்மையில் வெளியாகிய தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றில் கிளிநொச்சி மாசார் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி து.தக்சனா 176 புள்ளிகள் பெற்று கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதன் ஊடக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குறித்த கல்வி வலயத்தில் முதல் தடவையாக புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளியை பெற்று சித்தியடைந்த சந்தர்ப்பமாக இது பதிவாகியுள்ளது.
மேலும் நடைபெற்று முடிந்த 2022ம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளி 143 புள்ளியாக இருக்க, குறித்த பாடசாலையில் 16 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில் ஆறு மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தகது.
குறித்த பரீட்சையில் 14 மாணவர்கள் 100புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.