மன்னார் மடு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.

மன்னார் மடு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (04.09.2020) பிரதி பிரதேச செயலாளர் திருமதி. G.வினோஜிதா அவர்களின் நெறிப்படுத்தலில் பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் இன்று மடு பிரதேச செயலக கேற்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ செல்வம் அடைக்கலநாதன்,சார்ள்ஸ் நிர்மலநாதன், வினோ நாகரலிங்கம்,திலீபன் மற்றும் திணைக்கள தலைவர்கள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக மடுப் பிரதேசத்தில் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் சம்பந்தமாகவும் குறித்த நிகழ்வில் கலந்தாலோசிக்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.