மாத்தளையில் இ.தொ.காவின் பிரசாரம் ஆரம்பம்!
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் 5 பிரதேச சபையில் போட்டியிடும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பிரசாரத்தில் இ.தொ.காவின் முக்கிய உறுப்பினர்களும், வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
அவர்கள் மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
இந்தப் பிரசாரத்தின் போது இ.தொ.காவுக்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர் என்று கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் ஊடகங்களிடம் தெரிவித்தார்.