பிக்பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியும் ரெடி- என்னால் வர முடியாது என்று தவிர்த்த முக்கிய போட்டியாளர்.
விஜய் டிவியில் பிரமாண்டமாக ஓடி முடிவடைந்த ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. மற்ற சீன்களை விட இந்த சீசன் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. அத்தோடு இதில் டைட்டில் வின்னராக அசீம் தெரிவு செய்யப்பட்டதோடு 50 லட்சம் பணத்தையும் சொகுசு கார் ஒன்றையும் பெற்றார்.
மேலும் இரண்டாம் மூன்றாம் இடத்தை விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் பெற்றனர்.மேலும் அசீம் டைட்டில் வின்னர் ஆனதினால் விஜய் டிவியை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். ‘Boycott விஜய் டிவி’ என்றும் கூட ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முந்தைய சீசன்களை போலவே இந்த 6ம் சீசன் போட்டியாளர்களை மீண்டும் வர வைத்து ‘பிக் பாஸ் கொண்டாட்டம்’ என்கிற ஷோவை விஜய் டிவி நடத்தி இருக்கிறது.
எல்லோரும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில் நிவாஷினி மட்டும் வரவில்லையாம். அதற்கான காரணம் என்ன என்பது பற்றி தற்போது தகவல் இல்லை.மேலும் பல்வேறு சேனல்களிலும் இவர்கள் இன்டர்வியூக்களில் கலந்து கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.