இப்போதைக்கு தேர்தல் நடக்காது : மொட்டு உறுப்பினர்கள் அஞ்ச தேவையில்லை : பசில்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இப்போது நடத்தப்பட மாட்டாது என மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, தேர்தல் தொடர்பாக தேவையற்ற அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டாம் என எம்.பி.க்களுக்கு பசில் ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார்.
நிதிப் பிரச்சினையை முன்வைத்து வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு அரசாங்க அச்சகம் மறுத்துள்ளதால், தபால் மூல வாக்களிப்பையும் தேர்தல் ஆணையம் தற்போது ஒத்திவைத்துள்ளது.