அறுவை சிகிச்சைக்கு சென்றவருக்கு குடும்பக் கட்டுப்பாடு…!

பீகார் மாநிலத்தில் கைமூர் மாவட்டத்தில் உள்ள ஜகாரியா கிராமத்தைச் சேர்ந்த மன்கா யாதவ் என்பவர் விரை வீக்கம் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், அறுவை சிகிச்சைக்காக செயின்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது விரைவீக்க அறுவை சிகிச்சைக்கு பதிலாக தவறாக வாசெக்டமி குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்த பின்னர் மேனகா யாதவை சந்தித்த மருத்துவர்கள் உங்களுக்கு வெற்றிக்கரமாக குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டதாக கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து பேசிய பாதிக்கப்பட்ட மன்கா யாதவின் தந்தை எனது மகன் தற்போது தந்தையாகும் திறனை இழந்துவிட்டதால் அவர் மிகவும் மன சோர்வில் இருப்பதாகவும், விரைவீக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு திருமணம் செய்துகொள்ள எண்ணியிருந்த தனது மகனின் வாழ்க்கையை மருத்துவர்கள் சீரழித்துவிட்டதாகவும் வேதனையாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மேனகா யாதவ் கூறுகையில், தான் விரைவீக்க அறுவை சிகிச்சைக்கு சென்றதாகவும் ஆனால் எனக்கு தவறுதலாக குடும்ப கட்டுபாடு செய்யப்பட்டதாகவும் சிகிச்சை முடிந்த பின்னர் மருத்துவர்கள் தன்னிடம் “உங்களுக்கு குடும்ப கட்டுபாடு வெற்றிக்கரமாக செய்து முடிக்கப்பட்டதாக கூறியதை கேட்டு என் உலகமே நின்றுவிட்டது என ஆதங்கப்பட்டார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை அறிக்கையை 24 மணி நேரத்திற்குள் சமர்ப்பிக்க அம்மாநில சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மன்கா யாதவுக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும் குடும்ப கட்டுபாட்டு அறுவை சிகிச்சைக்கு தயார் என படிவத்தில் கையெழுத்திட்டார் என்றும் மருத்துவ பணியாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட மன்கா யாதவுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்று உள்ளது என்றும் அவரின் இரண்டு மனைவிகளும் தற்போது பிரிந்து சென்றுவிட்டனர் என என்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட செயின்பூர் சமூக சுகாதார மையத்தின் மருத்துவப் பொறுப்பாளர் டாக்டர் சுனில் குமார் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.