கேரளா அரசியல் இரட்டை கொலை- டி.ஒய்.எஃப்.ஐ(சிபிஎம்) உறுப்பினர்கள் .
திருவனந்தபுரம்: வெஞ்சரமூட்டில் சாலையில் இரண்டு டி.ஒய்.எஃப்.ஐ(சிபிஎம்) உறுப்பினர்கள் வெட்டிக்கொல்லப்பட்டிருந்தனர்.
திருவனந்தபுரம் நகரத்திலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில், வெஞ்சரமூட்டில் வைத்து ஓணம் தினத்தன்று இரண்டு இளைஞர்கள் வெட்டப்பட்டு குத்திக் கொல்லப்பட்டதை அடுத்து இரண்டு குடும்பங்கள் துயருக்குள்ளாகியுள்ளன. கொடூரமாக கொல்லப்பட்டவர்கள் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் (டி.ஒய்.எஃப்.ஐ) உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர்களாக இருந்த 24 வயது ஹக் முகமது மற்றும் 32 வயதான மிதிலாஜும் ஆகும்.
வெஞ்சராமூடு இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த உன்னியை போலீசார் கைது செய்துள்ளனர். இது வரையிலும் இந்த கொலைக்கு சம்பந்தமான மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளர்.
இரட்டைக் கொலை வழக்கில் சிபிஎம் மற்றும் காங்கிரஸ் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டும் அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது. அடூர் பிரகாஷ் எம்.பி.யின் பங்கு உண்டு என சிபிஎம் அரசியல் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர். சான்றுகளில்லாத பிரச்சாரங்கள் மூலம் அடூர் பிரகாஷ் எம்.பி., யை குற்றப்படுத்தப்படக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலை கூறினார்.
சிபிஎம் தலைவர்கள் ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் பிரச்சினையை பெரிதுபடுத்தி, மக்களை கலவரப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று கேரளா காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், காங்கிரஸ் அலுவலகங்கள், காங்கிரஸ் தலைவர்களின் வீடுகள் மீது பரவலான தாக்குதல்கள் தொடர்கின்றன. இதுவரை 143 காங்கிரஸ் அலுவலகங்கள் மீது தாக்குதல்கள் நடந்தப்பட்டதாக செய்திகள் வந்துள்ளது.
காதல் திருமணம் செய்திருந்த 24 வயதான ஹக் முகமதுக்கு ஒரு வயது குழந்தை மற்றும் நான்கு மாத கர்ப்பிணியான மனைவியும் உள்ளார். “என்ன சொல்வது? எல்லாம் தொலைந்துவிட்டது” என்று ஹக்கின் தாய் ஷாஹீதா ஊடகத்திற்கு தெரிவித்திருந்தார்..
இறந்த இரண்டு பேரும் பல சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் என்ற செய்தியும் வந்துள்ளது.