யாழ். பருத்தித்தீவிலிருந்த பொருள்கள் அவசர அவசரமாக எழுவைதீவுக்கு மாற்றம்!

யாழ்., பருத்தித்தீவில் சீனர்களின் நடமாட்டம் தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானதையடுத்து அங்கிருந்த பொருள்கள் அவசர அவசரமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. எழுவைதீவின் ஒதுக்குப்புறமாக அவை இறக்கப்பட்டுள்ளன.

கடலட்டைப் பண்ணை நடவடிக்கைக்காக சீனர்கள் தீவுப்பகுதிக்கு வருவது தொடர்பில் தொடர்ச்சியாக எழுப்பப்பட்ட ஆட்சேபனைகளின் அடிப்படையில் அந்த நகர்வுகள் சில காலம் இடம்பெறாமல் இருந்தன. இந்த நிலையில் கடந்த 16ஆம் திகதி சீனர்கள் மீண்டும் பருத்தித்தீவுக்குச் சென்றுள்ளனர். இது தொடர்பான செய்தி ஊடகங்களில் நேற்று வெளியாகியிருந்தது.

இதையடுத்து நேற்று அவசர அவசரமாக பருத்தித்தீவிலிருந்த பொருள்களை படகில் ஏற்றிக்கொண்டு எழுவைதீவுக்குச் சீனர்கள் சென்றுள்ளனர். அங்கு அவை தற்காலிகமாக இறக்கி வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பருத்தித்தீவில் சீனர்கள் 40 ஆயிரம் கடலட்டைக் குஞ்சுகளை விட்டிருந்ததாகவும், ஆனால் 100 கடலட்டைகள் வரையிலேயே அவர்களால் இப்போது அறுவடை செய்ய முடிந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.