வரிக் கொள்கைக்கு எதிராக கொழும்பில் போராட்டம்.
கொழும்பில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள தொழிற்சங்கப் போராட்டம் அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிரானதாகும்.
தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 40 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இதில் இணைந்து கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம பன்னஹக்கவும் இது தொடர்பில் கருத்து தெரிவித்ததுடன், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்னவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார்.