பொருத்தமில்லாத கிரவல் மூலம் செப்பனிடப்படும் வீதி.
முல்லைத்தீவு விசுவமடு கிழக்கு புத்தடி வீதியானது மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினரால் செப்பனிடப்படுகின்றது.
ஒப்பந்தக்காரர்கள் பொருத்தமில்லாத. கிரவல் அதாவது மக்கி மணணைப்பரவி செப்பனிட்டுக் கொண்டிருந்தவேளை அப்பிரதேச மக்கள் பொது அமைப்புக்களைச் சார்ந்த சிலர் முயன்று வேலையினை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
ஒப்பந்தகாரர்களான மாதர் அபிவிருத்திச் சங்கத்தினர் புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தகவல் வளங்கி எமது பணிக்கு இடையூறு விளைவிப்பதாக கூறியுள்ளனர்.
உடனடியாக பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகைதந்து நிலமையினை ஆராய்ந்த வேளை பொருத்தமற்ற மண்ணை பரவுவது இனங்காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களிடம் வினவியபோது வீதிக்கு பொருத்தமற்ற மண்ணை பரவுவதை நாம் இனங்கண்டு உயர் அஅதிகாரிகளுக்கு கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பதுக்குடியிருப்பு உதவித்திட்டமிடல்பணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மண்ணின் மாதிரியினை கொண்டு சென்றுள்ளார். உரிய அதிகாரிகள் கவனம் கொண்டு சரியான நடவடிக்கையினை மேற் கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.