ரணிலின் கருத்துக்கு மஹிந்த கடும் எதிர்ப்பு!- தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்தல்.

“தேர்தலை நடத்தாமல் இருக்ககூடாது. நிச்சயம் அது நடத்தப்பட வேண்டும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் விடுத்த அறிவிப்பு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.

“காசு இல்லை எனக் கூறி தேர்தலை நடத்தாமல் இருக்க முடியாது. ஜனாதிபதியின் கருத்து தவறு. தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையிலேயே நாம் இருக்கின்றோம்” – என்றும் மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.