தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? – அரசு தரப்பு விளக்கம்..!

மத்திய அரசு கடந்த 2004ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பல்வேறு பலன்கள் எதுவும் கிடைப்பதில்லை என்றும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் தாங்கள் ஆட்சிக்கு வந்ததும், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஓய்வூதிய திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்துத்துறை செயலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. புதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்பவும் துறை ரீதியாக உத்தரவிடப்பட்டது.

இதனால், தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படலாம் என்று தகவல் வெளியானது. ஆனால், இதனை மறுத்துள்ள நிதித்துறை அதிகாரிகள், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்படாத ஊழியர்களின் விவரங்களை பெறவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும், நீதிமன்ற வழக்கிற்காகவே புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.