பிச்சைக்கார பெண்ணின் குழந்தை கடத்தப்பட்ட நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் !

குழந்தையை தத்தெடுக்க ஒரு லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு
குழந்தையை விரும்பிய தாயை ஏமாற்றிய
போதைக்கு அடிமையான பிச்சைக்கார பெண் செய்த  மோசடி

பிச்சைக்கார பெண்ணொருவரின் ஒன்றரை மாத குழந்தையை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் நேற்று (02) இரவு வனாத்தவில்லுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பெண்ணையும் , குழந்தையும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குழந்தையை கடத்த உதவியதாக கூறப்படும் முச்சக்கரவண்டி சாரதி மற்றும் தரகர் உட்பட நான்கு பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

செய்திகளின்படி, சம்பவம் பின்வருமாறு.

குழந்தையை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண் குழந்தை பிரசவத்திற்கு வனத்தவில்லு பகுதியில் இருந்து வந்து கொழும்பில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். ஆனால் 7 மாத கர்ப்பத்தில் இருக்கும் போதே அவரது வயிற்றில் வளர்ந்த குழந்தை இறந்து விட்டது.

அவரது கணவர் வெளிநாட்டில் உள்ளார். அவரின், ​​பிரசவத்திற்காக கிட்டத்தட்ட மூன்று லட்சம் ரூபாய் அவரிடம் தயாராக இருந்தது. குழந்தை இறந்தமையால் விரக்தியடைந்த இந்தப் பெண், இந்தப் பணத்தைச் செலவழித்து எப்படியாவது ஒரு பிள்ளையை பெற்று கிராமத்திற்குச் சென்றுவிட வேண்டும் என்று நினைத்து, தெமட்டகொடையில் உள்ள நட்பான ஒருவரிடம் குழந்தையொன்றை தனக்கு தேடித் தருமாறு கேட்டுள்ளார்.

அதன்படி குழந்தை ஒன்றை தேடித்தர முன்வந்த நபரும், இந்த பெண்ணும் பல நாட்களாக குழந்தை ஒன்றைத் தேடி அலைந்துள்ளனர். இதற்கிடையில் பம்பலப்பிட்டியில் காலணி பழுது பார்க்கும் நபரிடம் இருந்து கிடைத்த தகவலுக்கு அமைய சிறு குழந்தையுடன் பிச்சை எடுக்கும் பெண் ஒருவரை கண்டுபிடிக்க முடிந்துள்ளது. இக் குழந்தை பிறந்து ஒன்றரை மாதமே ஆகியிருந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண், பிச்சைக்கார பெண்ணிடம் ஒரு குழந்தையை தத்தெடுக்க வேண்டும் என்றும், அதற்கு ஒரு லட்சம் ரூபாய் தரலாம் என்றும் கூறியுள்ளார். பிச்சைக்காரப் பெண்ணும், அவரது கணவரும் போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்கள். அந்த பெண் குழந்தையை தத்து கொடுக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

இவ்விடயத்தில் இடைத்தரகராகச் செயல்பட்டவருக்கு ஐம்பதாயிரம் ரூபாவும், முச்சக்கர வண்டி சாரதி உட்பட மற்ற இருவருக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாவும், குழந்தையைக் கொடுத்த பிச்சைக்கார பெண்ணிடம் ஒரு இலட்சம் ரூபாவும் கொடுத்த பெண், பின்னர் அவர் தெமட்டகொடைக்கு சென்று ஆயிரத்து தொள்ளாயிரத்து 900 ரூபாய்க்கு துணிகளையும் வாங்கியுள்ளார்.

எனினும் குழந்தையை தத்தெடுப்பதற்காக 1 லட்சம் ரூபாவை பெற்றுக்கொண்ட பிச்சைக்கார பெண் பணத்தை பெற்றுக் கொண்டு குழந்தையை, பணம் கொடுத்த பெண்ணிடம் கொடுக்க மறுத்துள்ளார். கொம்பனி வீதி வாகன தரிப்பிடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, ​​பிச்சைக்கார பெண்ணின் கைகளில் இருந்து குழந்தையை பறித்துக்கொண்டு, பெண்ணும் தரகரும் வாடகை காரில் வனாத்தவில்லு பகுதிக்கு சென்றுள்ளனர்.

இச்சம்பவத்திற்குப் பிறகு, பிச்சைக்காரப் பெண், தனது குழந்தை கடத்தப்பட்டதாக போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அவரது முறைப்பாட்டின் பிரகாரம், CCTV காட்சிகள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், முச்சக்கர வண்டி ஒன்றின் பதிவு இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், சந்தேக நபர்களை ஒவ்வொருவராக போலீசார் கைதுசெய்துள்ளனர்.

பணத்தை இழந்ததோடு , தத்தெடுத்த குழந்தையையும் பறிகொடுத்து கைது செய்யப்பட்ட 53 வயதுடைய பெண், அழுதுகொண்டே தனது கதையை பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

ஆனால் சட்டம் அந்த மனித விதிகளுக்கு புறம்பானது.

போதைப்பொருளுக்கு அடிமையான பிச்சைக்கார தம்பதியினரின் குழந்தை குற்றவாளியாக மாறுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.

இருப்பினும் குழந்தையின் தலைவிதி நீதிமன்றத்தில் தீர்க்கப்பட உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.