ஜனநாயகத்தைப் பாதுகாக்க உடன் தேர்தலை நடத்துங்கள்! – சஜித் வலியுறுத்து.
“ஜனநாயகத்தைப் பாதுகாக்க உடனடியாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துங்கள் என்று அரசிடம் கோருகின்றோம்.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றும் போது மேலும் கூறியதாவது:-
“இந்நாட்டிலுள்ள உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் பதவிக் காலம் இவ்வருடம் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள போதிலும், தற்போதைய அரசின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை மூடி மறைக்க அரசு தொடர்ந்தும் தேர்தலை ஒத்திவைக்கக் கடுமையாக முயற்சித்து வருகின்றது.
தேர்தலை நடத்தாமல் தடுக்க இதுவரை சுமார் 22 விதமான கூட்டுச் சதிகளை அரசு கையாண்டுள்ளது.
அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில்,தேர்தலை நடத்துவதற்கு நிதியை வழங்காமல் இருப்பதுதான் அரசின் கடைசி முயற்சியாகத் தெரிகின்றது. இது ஜனநாயகத்தை நசுக்கும் விடயமாகவும் அமைந்துள்ளது” – என்றார்.