“அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்” எனும் தொனிப்பொருளில் தேசிய மகளிர் தினம் புதுக்குடியிருப்பில்…..
“அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்” எனும் தொனிப்பொருளில் தேசிய மகளிர் தினம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இன்று (2022.03.08) காலை 10.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமான இந்த நிகழ்விற்கு பிரதேச செயலாளர் திரு சி.ஜெயகாந்த் தலமை தாங்கினார்.
பெண்களை கௌரவிக்கும் முகமாக புதுக்குடியிருப்பு ஆதிபரா சக்தி மண்டபத்திலிருந்து பிரதேச செயலகம் வரை சிறு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
பின்னர் மகளிரின் சுய உற்பத்தி பொருட்களுக்கான கண்காட்சி மண்டபமும் திறந்து வைக்கப்பட்டது.
பாடல், நடனம், பட்டிமன்றம் என சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட மகளிர் தின நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கணேசமூர்த்தி பவானிஅவர்களும்,
சிறப்பு விருந்தினர்களாக
வைத்தியர் திருமதி G.மிதுராயா
வைத்தியர் திருமதி N.தர்சினி ஆகியோரும்,
கௌரவ விருந்தினர்களாக திருமதி சி.கண்மணி, மத்தியஸ்தர் சபை உறுப்பினர், திருமதி R ஜெசிந்தா ராசம்மா, மத்தியஸ்தர் சபை உறுப்பினர், B.டியாயினி, குடும்பநல உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்வில் புலமைபரிசில் சித்தி எய்த மாணவர்களும், சாதாரண,உயர்தரம் சித்தி எய்த மாணவர்களும், அழகுக்கலை தொழில் முயற்சியாளர்களும், கௌரவிக்கப்பட்டதுடன் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டது.
மதியம் 12.40 க்கு நிறைவுற்ற இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர், சமுக சேவை உத்தியோகத்தர், நிர்வாக கிராம உத்தியோகத்தர், கிராம அலுவலர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொது மக்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.