திகார் ஜெயிலில் மணீஷ் சிசோடியாவிடம் அமலாக்கத் துறை விசாரணை!

தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தில்லி கலால் கொள்கை வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கடந்த பிப். 26 ஆம் தேதி கைது செய்தது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரது சிபிஐ காவல் மார்ச் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மணீஷ் சிசோடியா, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து மணீஷ் சிசோடியாவிடம் மேலும் விசாரணை செய்யும் பொருட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு இன்று காலை திகார் சிறைக்கு சென்றுள்ளது. சிசோடியாவிடம் விசாரணை தொடங்கி நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, மணீஷ் சிசோடியாவுக்காக சிம் கார்டு, போன் வாங்கியதாகக் அவரின் தனிச் செயலாளர் தேவிந்தர் சர்மாவிடம் சிபிஐ நேற்று விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.