உயரும் ரூபாயின் மதிப்பு , ஆண்டு இறுதியில் கடும் சரிவைச் சந்திக்கும் : எச்சரிக்கிறது ஃபிட்ச் !
கடந்த சில நாட்களாக வேகமாக அதிகரித்து வரும் இலங்கை ரூபாவின் பெறுமதி, அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் மீண்டும் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி, இந்த ஆண்டு இறுதிக்குள் ரூபாயின் மதிப்பு 390 ரூபாயாகலாம் என சர்வதேச நிதி ஆய்வு நிறுவனமான ஃபிட்ச் சொல்யூஷன்ஸ் தெரிவித்துள்ளது.
தற்போது கடனைத் திருப்பிச் செலுத்தாத இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தின் நிதி நிவாரணத்தைப் பெற்ற பின்னர் கடனை செலுத்துவதற்கான நடவடிக்கைகளை படிப்படியாக ஆரம்பிக்க வேண்டும் என்று இந்த நிறுவனம் கூறுகிறது.
இதன்போது ஏற்படும் டொலரின் மீதான அழுத்தத்தினால் ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடையலாம் என ஃபிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கையின் நிதி இடர் ஆய்வாளர் She Van Ting, 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டாலர் நீட்டிக்கப்பட்ட கடன் வசதிக்கான அனுமதியை இலங்கை பெறும் என்று கூறுகிறார்.
எவ்வாறாயினும், பலவீனமான பொருளாதாரச் செயற்பாடுகள் மற்றும் உத்தேச உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட வேலைத்திட்டத்தில் இலங்கை அதிகாரிகள் தொடர்ந்தும் நிலைத்திருப்பது பெரும் சவாலாக அமையும் என அவர் மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தற்போது 317 ரூபாயாக உயர்ந்து, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15 சதவீத வளர்ச்சியைக் காட்டினாலும், இந்த ஆண்டு இறுதிக்குள் ரூபாயின் மதிப்பு ஒரு டாலர் 390 ரூபாயாக வீழ்ச்சியடையும் என்று Fitch Ratings கணித்துள்ளது.