இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ஓட்டங்களை பெற்றது.
நியூசிலாந்து, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
குசால் மெண்டிஸ் 87 ரன்னும், கேப்டன் திமுத் கருணரத்னே 50 ரன்னுடனும், ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டும், மேட் ஹென்றி 4 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.