தேர்தலை தாமதப்படுத்தும் நடவடிக்கை தொடர்கிறது,,,
நீதிமன்ற உத்தரவை மீறி, தேர்தல் பணிக்கான பணத்தை, நிதித்துறை மீண்டும் தாமதப்படுத்துகிறது.
எதிர்வரும் புதன் கிழமைக்கு முன்னர் இந்தத் தொகை கிடைக்காவிட்டால் தேர்தலை மீண்டும் ஒத்திவைப்பதைத் தவிர வேறு வழியில்லை என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக செலவிட நேரிடும் என கடந்த 8ஆம் திகதி நிதியமைச்சுக்கு கடிதம் அனுப்பியதாகவும் , ஆனால் அந்தக் கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை எனவும் அச்சக பிரதானி கங்கானி லியனகே தெரிவித்தார்.
முதற்கட்ட வாக்குச் சீட்டு அச்சிடும் பணிக்கு குறைந்தபட்சம் 200 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக சுட்டிக்காட்டிய அச்சகத் தலைவர், அடுத்த வாரத்துக்குள் அந்தத் தொகை கிடைக்காவிட்டால் மீண்டும் வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
திட்டமிட்டபடி எதிர்வரும் 28ஆம் திகதி தபால்மூல வாக்களிப்பை நடத்த வேண்டுமாயின் பணத்தை அடுத்த வாரம் புதன்கிழமைக்கு முன்னர் வழங்க வேண்டும் எனவும் இல்லையெனில் தபால் வாக்களிப்பை ஒத்திவைக்க நேரிடும் எனவும் தேர்தல் திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த தேசிய மக்கள் படையும், ஐக்கிய மக்கள் சக்தியும் நடவடிக்கை எடுத்துள்ளன.