மாணவர்களை தாக்கிய கண்டி பாடசாலை அதிபர் மற்றும் 05 ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியல்
கண்டி, பொக்காவல ரீஜண்ட் தனியார் பாடசாலையில் கல்வி கற்கும் 10 சிறுவர்களை கடுமையாக தாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் உட்பட 06 ஆசிரியர்களை விளக்கமறியலில் வைக்க கண்டி பிரதான நீதவான் ஸ்ரீனித் விஜேசேகர இன்று உத்தரவிட்டுள்ளார்.
தாக்குதல் காரணமாக விடுதியில் இருந்து தப்பிச்சென்று கண்டி தலதா மாளிகையின் திருமண மண்டபத்தில் தங்கியிருந்த மாணவர்கள் மீது பொலிஸார் விசாரத்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பின்னர் கடுமையாக தாக்கப்பட்ட 10 சிறுவர்கள் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் உட்பட ஆறு ஆசிரியர்களை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.
குழந்தைகளில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்துள்ளது. இப்பள்ளியின் விடுதியில் இருந்த ஐந்து மாணவர்களும், பெண்கள் தங்கும் அறைகளில் இருந்து பிடிபட்டமையால் இந்த தண்டனைக்கு உட்படுத்தப்பட்டதாக பள்ளி போலீசாரிடம் தெரிவித்ததுள்ளனர்.
அதிபர் மற்றும் ஐந்து ஆசிரியர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.