பிணையில் விடுவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!
சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, கண்டி மேலதிக நீதவானினால் பிணையில் விடுவிக்கப்பட்ட கண்டி தனியார் பாடசாலையின் அதிபர் உட்பட ஆறு ஆசிரியர்களை மீள அழைக்குமாறு பொலிஸார் தாக்கல் செய்த மனுவை கவனத்தில் கொண்டு, குறித்த குழுவினரை 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கண்டி நீதவான் நீதிமன்றம் இன்று (16) மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நீதி விசாரணைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கண்டி, பொக்காவல, மொரன்கந்த பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு விடுதி ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்களை கொடூரமாக தாக்கி சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அதிபர் உட்பட ஆறு ஆசிரியர்களை கண்டி மேலதிக நீதவான் மொஹமட் ரபி நேற்று (15) ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.
ஆனால் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திடம் கேட்காமலும், பொலிஸாரை அழைக்காமலும் பிணை வழங்கப்பட்டுள்ளதை அறிந்த கண்டி பொலிஸ் மா அதிபர்கள் கூடி எடுத்த தீர்மானத்திற்கு பின்னர் , பிணை வழங்கப்பட்டோருக்கு எதிரான பிரேரணையை முன்வைக்க இன்று காலை தீர்மானித்தனர்.
அதன்பின் வழங்கப்பட்ட பிணை இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் பி.டபிள்யூ.சுஜீவ சம்பத் லேகம்கே, எச்.ஜி.நுவான் பிரதீப் பெரேரா, பி.ஜி.பியதிஸ்ஸ, சாந்த பண்டார திஸாநாயக்க, ஹிமாஷி ஹன்சிகா குணசேகர, கே.டபிள்யூ.பிரசங்க மோனோஜா தில்ஹாரா ஆகியோரை மீண்டும் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.