ரெலோவின் எம்பிக்கள் யாழ்பாணம் வருகின்றனர்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு இன்று(06) மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நாவலர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஜனா கருணாகரம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் தமிழரசுக் கட்சிக்கு அடுத்தபடியாக அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சி இதுவாகும்.