தேசிய பொருளாதார மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவு.
தேசிய பொருளாதார மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவு
தேசிய பொருளாதார மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
இக்குழுவின் முதலாவது கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போது அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்க்ஷ முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா வழிமொழிந்தார்.
அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் கொள்கைகள் தொடர்பில் மேற்பார்வை செய்தல் மற்றும் நாட்டின் பௌதிகத் திட்டங்கள் தொடர்பில் இக்குழு பணியாற்றவுள்ளதால் கட்சி பேதமின்றி செயற்பட எதிர்பார்ப்பதாக குழுவின் புதிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இதன்போது தெரிவித்தார்.