5ஆவது முறையாகத் திருமணம் செய்யவுள்ள 92 வயது ஊடகச் செல்வந்தர்.
பல ஊடக நிறுவனங்களுக்குச் சொந்தக்காரரான ரூப்பர்ட் மர்டோக் (Rupert Murdoch) தமது 92ஆவது வயதில் 5ஆவது முறையாகத் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.
அவர் 66 வயது ஆன் லெஸ்லி ஸ்மித்தைத் திருமணம் செய்யவுள்ளார்.
மீண்டும் காதலில் விழுவது பதற்றமாய் இருந்ததாகத் திரு. மர்டோக் தமக்குச் சொந்தமான New York Post நாளேட்டில் குறிப்பிட்டார்.
ஆனால் இதுவே தமது கடைசிக் காதலாக இருக்கும் என்ற அவர் தாம் மகிழ்ச்சியாய் இருப்பதாகவும் சொன்னார்.
அவர் தமது 4ஆவது மனைவியான ஜெர்ரி ஹாலை (Jerry Hall) 6 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர் சென்ற ஆண்டு விவாகரத்துச் செய்தார்.
The Wall Street Journal, Fox News உட்பட பல மதிப்புக்குரிய ஊடகங்கள் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மர்டோக்கிற்குச் சொந்தமானவை.
அந்த நிறுவனங்களின் மதிப்பு சுமார் 20 பில்லியன் டாலர் என்றது Forbes.
மர்டோக்கிற்கு 6 பிள்ளைகள் உள்ளனர்.