‘IMF நிதி என்பது மூழ்க போனவர்களுக்கு மேலே ஏற கிடைத்த ஒரு கயிறு – ஹர்ஷ டி சில்வா

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி என்பது நீரில் மூழ்கும் மனிதனுக்கு வழங்கப்பட்ட கயிறு மட்டுமே என ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாளர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது ஒரு நீண்ட கடினமான பயணத்தின் ஆரம்பம் என்று கூறிய அவர், வெற்றிகரமான கடன் மறுசீரமைப்பு மற்றும் கடினமான பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் இந்த பயணத்தின் முடிவில் வெற்றியை அடைய வேண்டும் என்று கூறினார்.

“இப்போது, ​​​​இந்த சபையில் சிலர் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியைப் பெற வேண்டும் எனக் கூறியபோது கைகொட்டிச் சிரித்தனர், ஆனால் நான் அவர்களை சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லச் சொன்னபோதும் அதை, ​​அவர்கள் எதிர்த்தனர். எதிர்த்தது மட்டுமன்றி நாட்டை மீட்க மாற்றுப் பொருளாதாரக் கொள்கை எதையும் முன்வைக்கவுமில்லை. நாங்கள் அன்றே சர்வதேச நாணய நிதியத்துக்குச் சென்றிருந்தால், சிக்கலை ஆரம்பத்திலேயே தீர்த்திருக்கலாம்.”

ஐக்கிய மக்கள் சக்தி , நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பொருளாதார தொலைநோக்கு என்ற கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டு நாடாளுமன்றத்திலும் நாட்டு மக்களிடமும் சமர்ப்பித்துள்ளதாக கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

“இந்த வரிவிதிப்பு குறித்து நாங்கள் அதில் பேசியுள்ளோம். 1.1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும் அதில் 120,965 பேர் வரி செலுத்துவதாகவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். எனவே, தேவையான வருமானத்தை எவ்வாறு சேகரிப்பது? அத்துடன் தனிநபர் வருமான வரியான 36% அறவிடப்படாவிட்டால் எதிர்பார்த்த அளவு வரியை அறவிட முடியாது என சியம்பலாபிட்டிய அமைச்சர் கூறுகிறார். நான் அதை முற்றிலும் எதிர்க்கிறேன். ஏனெனில் ? நான்கரை லட்சம், ஐந்து லட்சம் வரை, தொழில்வரியை அதிகபட்சமாக 24% மற்றும் 25% என வைத்துக் கொள்ளலாம். அப்போது அதிக வருமானம் ஈட்டுபவர்கள் மீதான வரியை குறுகிய காலத்தில் 39%லிருந்து 40% ஆக உயர்த்த வேண்டும்.

“இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். அதனால், நல்லதுக்கு நல்லது என்று சொல்லத் தயங்க வேண்டியதில்லை. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 155 பக்க நிதி நிதி ஆவணத்தைப் படித்துவிட்டு, எதிர்காலத்தில் எங்களது கருத்தைத் தெரிவிப்பேன். இது தோற்கடிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. ஆனால், முன் இருக்கும் சவாலை இன்னும் வெளிப்படையாகப் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.