நீர் வழங்கல் திட்டங்களை நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபைக்கு கையளித்தல் தொடர்பான கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தில் உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் நிறைவு செய்யப்பட்ட நீர் வழங்கல் திட்டங்களை நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு கையளித்தல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று(30) வியாழக்கிழமை இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

நான்கு பிரதேச செயலர் பிரிவுகளை உள்ளடக்கியதாக 95 கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த திட்டங்களை சமூகத்தவர்களே பராமரிப்பதில் எழுந்துள்ள பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதோடு இறுதியாக மாவட்ட அபிவிருத்தி குழுவிற்கு சமர்ப்பித்து முடிவெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.