தேர்தல் நடக்காது என தெரிந்ததும் கூட்டம் குறைந்துவிட்டது – அனுர திஸாநாயக்க
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாது என்ற சமிக்கை கிடைத்ததையடுத்து, தேர்தலுக்கான மக்களின் ஆர்வம் குறைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மார்ச் 09ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் வகையில் தமது கட்சி செயற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்ற அரவணைப்புடனும் உத்வேகத்துடனும் மக்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
எனவே, அப்போது தமது அமைப்பினால் மக்களின் கோரிக்கைகளை சமாளிக்க முடியாமலிந்தது என்று அவர் கூறினார்.
ஆனால் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்ற சமிக்கை கிடைத்துள்ளதால் மக்களின் உற்சாகம் குறைந்துள்ளதாக கொலன்னாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்தார்.