நூற்று கணக்கான மாணவர்களின் பங்கேற்புடன் சிறப்பாக இடம் பெற்ற கராத்தேபயிற்சி பட்டறை
டிராகன் மார்ஷல் ஆட்ஸ் இன்ஸ்டியூட் கழக பிரதம பயிற்றுநர் சென்செய். எஸ். ரஞ்சித் தலைமையில் நேற்று
ஞாயிற்றுக்கிழமை மானிப்பாய் இந்துக்கல்லூரி மண்டபத்தில் கராத்தே பயிற்சி பட்டறை நடைபெற்றது.
சோட்டோகன் கராத்தே அக்கடமி இன்டர்நேஷனல் தலைமை ஆசிரியரும், தேசிய கராத்தே நடுவரும், கராத்தே ஒவ் ஜப்பான் பெடரேஷன் இன் சர்வதேச விவகார பணிப்பாளரூமான சிகான். அன்ரோ டினேஷ் தலைமையில் கராத்தே பயிற்சி பட்டறை நடைபெற்றது.
இந்த பயிற்சி நெறியில் உதவி பயிற்றுநர்களாக சென்செய் கிருஷ்ணா மற்றும் சென்செய். கார்த்தீபன் கலந்து கொண்டனர்.
கராத்தேயின் பாட விதானங்களில் உள்ளடங்கியுள்ள பொறிமுறைகள் மற்றும் ஒழுக்க நெறிமுறைகள் தொடர்பாகவும் ஆசான். அன்ரோ டினேஷ் செய்முறை மற்றும் விளக்கங்களை வழங்கினார்
100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இந்த பயிற்சி பட்டறையில், பங்கு பற்றின்.
பயிற்றுநர்களாக சென்செய். சந்திரபோஸ், ரஞ்சித், ரமணிகாந்த், துஷானந்த், ரமேஷ் ஆனந்தகுமார், ஜெகதீஸ், டாக்டர்.குலேந்திரன், செல்வகுமார், அனிஸ்டன், சந்திரகுமார், ஜனிலன், நிரூசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பிரதம அதிதியாக யாழ் மானிப்பாய் இந்துக் கல்லூரி அதிபர் திரு.இந்திரகுமார், அதிதியாக திரு. சசிதரனும் கலந்து கொண்டனர்.
.