ஆஸ்கர் விருது புகழ் பொம்மன் – பெள்ளி தம்பதியுடன் உரையாடிய பிரதமர் மோடி (video)
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்த பிரதமர் மோடி, நேற்று சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல திட்டங்களை தொடங்கி வைத்து விட்டு இரவு கர்நாடக மாநிலம் சென்றார்.
இந்த நிலையில் இன்று ஹெலிகாப்டர் மூலம் கர்நாடக மாநிலம் பந்திபூருக்கு வந்த பிரதமர் அங்கிருந்து தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சாலை மார்க்கமாக வருகை புரிந்தார். தெப்பக்காடு யானைகள் முகாமில் பாகன்களுடன் யானைகள் நின்றன.
யானை முகாமுக்கு வந்த பிரதமர் மோடி, யானைகளுக்கு கருப்புகளை வழங்கினார். அதன்பின்னர், யானை முகாமில் இருக்கக் கூடிய மூத்த யானை பாகன்களான, திருமாறன், தேவராஜன், குன்னன், மாறன் ஆகியோருடன் உரையாடினார். அதனைத் தொடர்ந்து, பொம்மன்- பெள்ளி தம்பதியுடன் கலந்துரையாடினார்.
பொம்மன் – பெள்ளி தம்பதியுடன் பேசும்போது அவர்கள் வளர்த்துவரும் யானைக்குட்டியையும் தொட்டுப் பார்த்து பிரதமர் மகிழ்ந்தார். சுமார் ஒரு மணி நேரம் வரையில் தெப்பக்காடு முகாமிலிருந்த மோடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். படூகர், தோடர் இன மக்கள் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கவுள்ளனர்.
A special day, in the midst of floral and faunal diversity and good news on the tigers population…here are highlights from today… pic.twitter.com/Vv6HVhzdvK
— Narendra Modi (@narendramodi) April 9, 2023